‘மாஸ்க் போடாமல் தியேட்டரில் அனுமதி இல்லை’ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

‘மாஸ்க் போடாமல் தியேட்டரில் அனுமதி இல்லை’ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

‘மாஸ்க் போடாமல் தியேட்டரில் அனுமதி இல்லை’ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை, வரும் 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் படி, தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் தியேட்டர்களை திறப்பதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பின் போது பின்பற்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

‘மாஸ்க் போடாமல் தியேட்டரில் அனுமதி இல்லை’ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

விதிமுறைகள் பின்வருமாறு;

  • தியேட்டரில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்.
  • உள்ளேயும் வெளியேயும் குறைந்த பட்சம் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
  • திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில், குறியீடுகள் போட வேண்டும்.
  • ஒவ்வொரு திரைப்பட காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.
  • தியேட்டரில் எஸ்கலேட்டர், லிப்ட் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • டிக்கெட் வாங்குபவரின் தொலைபேசி எண்ணை தியேட்டர் நிர்வாகம் பெற வேண்டும்.
  • திரைப்பட இடைவேளையின் போது மக்கள் வெளியே செல்ல ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும்.திரைப்பட இடைவெளிக்கான கால அளவை அதிகரிக்க வேண்டும்.