கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

செப்.28ம் தேதி திறக்கப்பட உள்ள கோயம்பேடு சந்தைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மூடுமாறு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதற்கு மாறாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. அதன் படி, திருமழிசைக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து வியாபாரிங்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் வரும் 28ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த நிலையில், மார்க்கெட் திறக்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மார்க்கெட் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் வியாபாரிகள், பணியாளர்கள்,தொழிலாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தனிநபர் மற்றும் சில்லறை வணிகம் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதே போல, பணியாளர்களை எளிதில் அடையாளம் கொள்ளக்கூடிய வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும் என்றும் சாலையோர விற்பனை, அங்காடிக்குள் பொது இடங்களில் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 – காலை 5 மணி வரையிலும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரையிலும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.