காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்விற்க கட்டுப்பாடு : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

 

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்விற்க கட்டுப்பாடு : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கடந்த 6 ஆம் தேதி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காசிமேட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு தற்போது அனுமதி கிடையாது என்றும் மீன் மார்க்கெட்டுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல தனியாக பாதை அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்விற்க கட்டுப்பாடு : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து, காசிமேட்டில் பொதுமக்கள் மீன் வாங்க அனுமதி கிடையாது என்றும் அங்கிருந்து நாள்தோறும் கடலுக்கு மீன்பிடிக்க 70 விசைபடகுகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மீன்பிடி இறங்கு தளத்தில் மீன்விற்பனை செய்ய 50 விசைப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்றும் தெரிவித்தார்.