மாஸ்க் போடலன்னா… மதுபானம் இல்ல : டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்குப்பிடி உத்தரவு!

 

மாஸ்க் போடலன்னா… மதுபானம் இல்ல : டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்குப்பிடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனினும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்த நிதியை வைத்து நிலைமையை அரசு ஈடு செய்தது. இதனிடையில், கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத செயல்கள் மீண்டும் தலை தூக்கியது.

மாஸ்க் போடலன்னா… மதுபானம் இல்ல : டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்குப்பிடி உத்தரவு!

இத்தகைய சூழலில் தான், டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஜூன் 14-ஆம் தேதி முதல் பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மாஸ்க் போடலன்னா… மதுபானம் இல்ல : டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்குப்பிடி உத்தரவு!

அதன் படி, 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என இரண்டு பணியாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.