லாக்டவுன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் ருத்ரநாத் கோயில் நடை திறப்பு…

 

லாக்டவுன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் ருத்ரநாத் கோயில் நடை திறப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய 5 இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமானின் உடல் பாகங்கள் இந்த இடங்களில் தனித்தனியாக இருந்ததாக சைவர்கள் நம்புகின்றனர். கேதார்நாத்தில் இறைவனின் உடல் பகுதி, துங்கநாத்தில் கைகள், ருத்ரநாத்தில் முகம், மத்தியமகேஷ்வரில் தொப்புள் மற்றும் கல்பேஷ்வரில் தலைமுடியும் தோன்றியதாக நம்பிக்கை உள்ளது.

லாக்டவுன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் ருத்ரநாத் கோயில் நடை திறப்பு…

இமயமலையில் கார்வாலில் அமைந்துள்ள ருத்ரநாத் கோயில் கடல் மட்டத்திலிருந்து 11,808 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சிவனின் முகம் கண்டெடுக்கப்பட்ட அல்லது தோன்றிய இடத்தில்தான் ருத்ரநாத் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் வழக்கமாக ருத்ரநாத் கோயில் திறக்கப்படும். அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு ருத்ரநாத் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட பூசாரிகள் மற்றும் வாரிய அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பக்தர்கள் கோயில் பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. ருத்ரநாத் கோயிலின் உதவி பூசாரி டாக்டர் அரவிந்த் பட் கூறுகையில், லாக்டவுன் காரணமாக இறைவன் சிவாவின் பல்லக்கை சுமக்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. லாக்டவுன் முடிவுக்கு வரும் வரை பக்தர்கள் கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்