கிழிந்த ஜீன்ஸ் விவகாரம்.. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ்.வுடன் தொடர்புப்படுத்தாதீங்க… தத்தாத்ரேயா

 

கிழிந்த ஜீன்ஸ் விவகாரம்.. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ்.வுடன் தொடர்புப்படுத்தாதீங்க… தத்தாத்ரேயா

கிழிந்த ஜீன்ஸ் விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை பிரியங்கா காந்தி கிண்டல் அடித்ததை குறிப்பிட்டு, எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ்.வுடன் தொடர்பு படுத்துவதில் எந்த காரணமும் இல்லை என்று தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மதிப்புகள் இல்லாததால், பெண்கள் உள்பட இளைஞர்கள் முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ் அணிவதன் மூலம் இந்த நாட்களில் விசித்திரமான பேஷன் போக்குகளை பின்பற்றுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.

கிழிந்த ஜீன்ஸ் விவகாரம்.. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ்.வுடன் தொடர்புப்படுத்தாதீங்க… தத்தாத்ரேயா
பா.ஜ.க. தலைவர்கள் (கோப்புப்படம்)

திராத் சிங் ராவத் மன்னிப்பு கேட்டதுடன் கிழிந்த ஜீன்ஸ் விவகாரம் முடிவுக்கு வந்ததால் என்று நினைத்தால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நான் இருக்கும் போது விடுவேனா என்று பா.ஜ.க. தலைவர்களை இந்த விவகாரத்தில் உள்ளே இழுத்தார். பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. தலைவர்கள் காக்கி டிரவுசரில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, கடவுளே! அவர்களின் முழங்கால்கள் தெரிகின்றன என்று பதிவு செய்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது.

கிழிந்த ஜீன்ஸ் விவகாரம்.. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ்.வுடன் தொடர்புப்படுத்தாதீங்க… தத்தாத்ரேயா
தத்தாத்ரேயா ஹோசபாலே

இது குறித்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) புதிய சர்கார்யாவா (பொதுச்செயலாளர்) தத்தாத்ரேயா ஹோசபாலே கூறுகையில், யாரை அந்த பெண் குறிப்பிடுகிறாளோ அவள் குறிப்பிட்ட நபரை பதில் அளிக்கக்கூடியவர். மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். அது சரியா அல்லது தவறா என்பது அவர்களிடம் கேட்கப்பட வேண்டிய ஒன்று. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ்.வுடன் இணைக்க எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார்.