• April
    04
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

rss

திக்விஜய சிங்

இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றால் மற்ற நாடுகளில் பிறந்த இந்துக்கள்?... ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேள்வி கேட்கும் திக்விஜய சிங்......

இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றால் மற்ற நாடுகளில் பிறந்த இந்துக்களின் அடையாளம் என்ன? என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கேள்வி கேட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்.


மோகன் பகவத்

ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்...

ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு முடிந்தது என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.


ராகுல் காந்தி

அரைக்கால் டவுசர் அணிந்த ஆர்.எஸ்.எஸ். நபர் அசாமை ஆளக்கூடாது - ராகுல் காந்தி

அசாமை அரைக்கால் டவுசர் அணிந்த ஆர்.எஸ்.எஸ். நபர் ஆளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.


ஆர்.எஸ்.எஸ்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு எந்த மாதிரி வந்தாலும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்! ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.



இம்ரான் கான்

சர்வாதிகாரம் மற்றும் இனவெறி சித்தாந்தத்தை கடைபிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.- இம்ரான் கான் குற்றஞ்சாட்டு

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் போரை தொடங்காது. சர்வாதிகாரம் மற்றும் இனவெறி சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

காவி சேவகன் பிரதமரான கதை: வெளியானது மோடி வெப் சீரிஸ்?

மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாவதின் சர்ச்சை ஒருபுறம் இருக்க, சைலண்டாக மோடி வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.

பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் இன்று (ஏப்ரல் 5) வெளியாவதாக இருந்தது. இந்தத் திரைப்படம் மோடிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கும் எண்ணத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த சர்ச்சைகளால் படம் வெளியாகும் தேதியை அதன் தயாரிப்பாளர் தள்ளி வைத்தார். இந்நிலையில் சைலண்டாக மோடி வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.

modi

மோடி வெப் சீரிஸ் 10 பாகங்களை உடையது. அதில் 5 பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மிர் புடா மற்றும் ராதிகா ஆனந்த் இணைந்து எழுதிய இக்கதையை உமேஷ் சுக்லா இயக்கியுள்ளார். மோடி திரைப்படம் அளவு இதன் டிரெய்லர் பீதியை கிளப்பவில்லை என்றாலும், இதன் நோக்கமும் மோடியை முக்கியமான இந்திய ஆளுமையாக சித்தரிப்பதுதான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் மோடியின் பங்களிப்பு, இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்தது என பல்வேறு விஷயங்களை இதில் பதிவு செய்துள்ளனர். இதன் அடுத்த 5 பாகங்களில், மோடியின் அரசியல் பயணம் பற்றி விவரிக்கப்படும் என தெரிகிறது.

மோடி

Modi journey of a common man என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் eros now-இல் வெளியிடப்பட்டுள்ளது. மோடி திரைப்படம் அளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தாது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடுத்த 5 பாகங்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arunpandiyan Fri, 04/05/2019 - 16:49
Modi journey of a common man மோடி ஆர் எஸ் எஸ் பாஜக bjp rss Narendra Modi மோடி வெப் சீரிஸ் சினிமா

English Title

Modi's contribution to Rss; Modi journey of a common man web series released

News Order

0

Ticker

0 பாகிஸ்தானில் வீடு வாங்கலாம்; ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் பேச்சு

2025-ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருக்கும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திரேஷ் குமார், காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசியல் சாதூர்யத்துடன் ராணுவம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அங்கு அரசியல் நிலவரம் மாறியிருக்கிறது. 1947 -க்கு முன்னதாக பாகிஸ்தான் என்பதே  கிடையாது. 1945-இல் அது இந்துஸ்தானின் அங்கமாகவே இருந்தது. 2025-இல் மீண்டும் இந்துஸ்தானின் அங்கமாக மாறும். ஐரோப்பிய யூனியனைப் போல அகண்ட பாரதம் அமையும் என பேசினார்.

மேலும் அவர், இன்னும் 7 ஆண்டுகளில் நீங்கள் பாகிஸ்தான் பகுதிகளில் வீடு வாங்கலாம், தொழில் தொடங்கலாம் என்றார்.
 

Arunpandiyan Sun, 03/17/2019 - 21:22
Indresh kumar rss india pakistan இந்திரேஷ் குமார் இந்தியா

English Title

you can buy home in pakistan; Rss leader speech

News Order

0

Ticker

0 
ஆர்.எஸ்.எஸ் - மோடி

மக்களவை தேர்தல் 2019: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு மோடியின் வேண்டுகோள்?!

ஜனநாயக கட்சி, மதச் சார்பற்ற கட்சி என அரைகூவல் விடும் பாரத பிரதமர் மோடி, இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜகவை விமர்சித்த பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவ அமைப்பு

விஜயபுரா: பாஜகவை விமர்சித்த கல்லூரி பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்திருக்கிறது ஏபிவிபி இந்துத்துவ அமைப்பு.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சந்தீப் வாதர். இவர், இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழலுக்கு பாஜகதான் காரணம் என பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். இதனால் கடுப்பான ஏபிவிபி எனும் இந்து தேசியவாத அமைப்பு, அவரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்திருக்கின்றனர். அவரது பேஸ்புக் பதிவை நீக்க செய்தது மட்டுமல்லாமல், இனி இப்படி பதிவிடக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது அங்கு ஒரு காவலர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மன்னிப்பு கேட்ட பேராசிரியரின் மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்படுள்ளது, அவரை தொடர்புகொள்ள இயலவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏபிவிபி அமைப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல்முறை அல்ல, பீப் (மாட்டிறைச்சி) திருவிழா நடத்திய சென்னை ஐஐடி மாணவரை தாக்கியதும் இதே இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள்தான். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

Arunpandiyan Sun, 03/03/2019 - 16:43
Abvp rss bjp sandeep wathar india pakistan karnataka பேராசிரியர் சந்தீப் க்ரைம் குற்றம் இந்தியா

English Title

ABVP goons force Karnataka professor to kneel and apologise for criticizing bjp

News Order

0

Ticker

0 
anit

மதக்கலவரம் நிகழ வாய்ப்பு: ராமலிங்கம் கொலையும், அமித்ஷாவின் தமிழக வருகையும்?

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


pinarayi vijayan

சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சி: கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு

கேரளாவில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.