நம் நாட்டில் உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட் அறிமுகம்! விலையை கேட்டு மட்டும் அதிர்ச்சி அடையாதீங்க! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    19
    Wednesday

Main Area

Mainநம் நாட்டில் உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட் அறிமுகம்! விலையை கேட்டு மட்டும் அதிர்ச்சி அடையாதீங்க!

உலகின் விலை உயர்ந்த சாக்லேட்
உலகின் விலை உயர்ந்த சாக்லேட்

ஐ.டி.சி. நிறுவனம் ஐ.டி.சி. பாபெல்லே என்ற பிராண்ட் பெயரில் உயர் ரக சாக்லெட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பாபெல்லே பிராண்ட் சாக்லேட் சுவை மற்றும் தரத்தில் சிறப்பாக இருப்பதால் அதை வாங்கி சுவைப்பதற்கென ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஐ.டி.சி. பாபெல்லே நிறுவனம் தற்போது உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

உலகின் விலை உயர்ந்த சாக்லேட்

தீபாவளி பண்டிகை கருத்தில் கொண்டு ஐ.டி.சி. பாபெல்லே Fabelle Trinity - Truffles Extraordinaire என்ற உலகின் மிகவும் விலை உயர்ந்த சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. ஒரு கிலோ சாக்கெட் விலை ரூ.4.3 லட்சமாம். மேலும் ஆர்டர் செய்தால் மட்டுமே இந்த சாக்லெட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என ஐ.டி.சி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனை

Fabelle Trinity - Truffles Extraordinaire சாக்லேட், உலகின் விலை உயர்ந்த சாக்லேட் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இந்த சாக்லேட் குறித்து ஐ.டி.சி. நிறுவனத்தின் உணவு பிரிவு தலைமை செயல் அதிகாரி அனுஜ் ருஷ்டகி கூறுகையில், உலகின் மிக விலையுயர்ந்த சாக்லேட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பதை உலகுக்கு உணர்த்துவதே இதன் குறிக்கோள் என தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.