நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகை- தமிழக அரசு

 

நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகை- தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு அரிசி,பருப்பு உள்ளிட்ட பொருட்களும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1000 பணமும் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகை- தமிழக அரசு

இந்நிலையில்,நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்களுக்கும் ரூ.2,000 கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னதாக நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 1 லட்சத்து 3,343 நபர்களுக்கு ரூ,2,000 வழங்கப்பட்டதை போல உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை எழுந்ததாகவும் அதனை பரிசீலித்து  நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் ரூ.2,000 வழங்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான முழு விவரங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என்றும் நெசவாளர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.