ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

 

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் தொடர்பாக அவதூறாக பேசியதாக தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. அவரை சென்னை மாநகர போலீசார் கைது செய்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அங்கு அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்கவே, சிறை செல்வதிலிருந்து தப்பினார்.

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடிஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சென்னை மாநகர போலீஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ஆர்.எஸ்.பாரதியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதாலும், அவருக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டதாலும் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்போது ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். ஆர்.எஸ்.பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். இதனால் உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல் முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.