“ஸ்டாலின் மகள் வீட்டில் 1.31 லட்சம் தாங்க இருக்கு, அதுவும் கணக்கில் வந்த பணமாம்!”

 

“ஸ்டாலின் மகள் வீட்டில் 1.31 லட்சம் தாங்க இருக்கு, அதுவும் கணக்கில் வந்த பணமாம்!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இதேபோல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் & மகள் மற்றும் சேலஞ்ச் உதயநிதி சகோதரி & மச்சான் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 12 மணிநேரமாக சோதனை நடத்தினார். ஆனால் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து வருமான வரித்துறையினர் எந்த தகவலையும் தரவில்லை.

“ஸ்டாலின் மகள் வீட்டில் 1.31 லட்சம் தாங்க இருக்கு, அதுவும் கணக்கில் வந்த பணமாம்!”

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, “ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ. 1.31 லட்சம் மட்டுமே கிடைத்தது. அதையும் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தந்துவிட்டு போய்விட்டனர். தொலைக்காட்சியில் வந்த கருத்துக்கணிப்புகளையெல்லாம் பார்த்துவிட்டு ஜீரணிக்க முடியாமல் வயித்தெரிச்சலில் வருமானவரித்துறையினரை பாஜக ஏவியது. இதற்காக நான் மோடியிடம் நன்றி சொல்கிறேன். எங்களுக்கு மடியில் கனமில்லை. ஏதோ எதிர்பார்த்து வந்தார்கள் ஆனால் ஏமாற்றத்தோடு சென்றுவிட்டனர்” எனக் கூறினார்.