அ.தி.மு.க மீது தொடர்ந்த ஊழல் வழக்கைத் திரும்பப் பெற்ற ஆர்.எஸ்.பாரதி!

 

அ.தி.மு.க மீது தொடர்ந்த ஊழல் வழக்கைத் திரும்பப் பெற்ற ஆர்.எஸ்.பாரதி!

அ.தி.மு.க மீது தொடர்ந்த ஊழல் வழக்கைத் திரும்பப் பெற்ற ஆர்.எஸ்.பாரதி!
சாலை அமைக்க டெண்டர் விட்டதில் அ.தி.மு.க அரசு மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது என்று கூறி தொடர்ந்த வழக்கை ஆர்.எஸ்.பாரதி திரும்பப் பெற்றார்.

அ.தி.மு.க மீது தொடர்ந்த ஊழல் வழக்கைத் திரும்பப் பெற்ற ஆர்.எஸ்.பாரதி!தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியில் 464 கி.மீ தூரத்துக்கு சாலை விரிவாக்கப் பணி செய்ய ரூ.1165 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கும் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க மீது தொடர்ந்த ஊழல் வழக்கைத் திரும்பப் பெற்ற ஆர்.எஸ்.பாரதி!வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டர் விடப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். மேலும் புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே வழங்கியிருந்த புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறினார். இதை ஏற்றக் கொண்ட நீதிபதி சதீஷ்குமார், “டெண்டரே ஒதுக்காதபோது எப்படி ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும்” என்று கேள்வி எழுப்பி வழக்கைத் திரும்பப் பெறும்படி கூறினார். ஆர்.எஸ்.பாரதியிடம் இது தொடர்பாக பேசிவிட்டு கூறிவதாக அவரது வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சாலை விரிவாக்கப் பணி டெண்டர் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் ஃபைபர் ஆப்டிக் இழை பதிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.