திருமங்கலம் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் – லாரி ஓட்டுநர் கைது!

 

திருமங்கலம் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் – லாரி ஓட்டுநர் கைது!

மதுரை

திருமங்கலம் அருகே மினி லாரியில் கடத்திவந்த 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.5 டன் குட்கா புகையிலை பொருட்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், நேற்றிரவு திருமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

திருமங்கலம் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் – லாரி ஓட்டுநர் கைது!

சோதனையின்போது, மினி லாரியில் பெட்டிகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 9 லட்சம் மதிப்பிலான 1.5 டன் குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, லாரி ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த மாடசாமி என்பதும், சேலத்தில் இருந்து விருதுநகருக்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, மாடசாமியை கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.