தூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.86 லட்சம் நிதி உதவி

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.86 லட்சம் நிதி உதவி

தூத்துக்குடியில், சமீபத்தில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு தென் மண்டல காவல்துறை சார்பில் ரூ.86 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மதுரை தென் மண்டல ஐ.ஜி. எஸ்.முருகன், நேரில் சென்று காவலர் குடும்பத்திடம் இந்த தொகையை வழங்கினார்.

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.86 லட்சம் நிதி உதவி
காவலர் சுப்பிரமணியன்

கடந்த 18.08.2020 அன்று, துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க மதுரை தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சார்பில், அவர்கள் விருப்பத்திற்கேற்ப நிதியுதவி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.86 லட்சம் நிதி உதவி

அப்படி திரட்டப்பட்ட 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகையை , ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டார விளையில் உள்ள காவலர் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று தென் மண்டல ஐ.ஜி. எஸ்.முருகன் நேரில் வழங்கினார். அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு , தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அ.ஷாலினி