தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி!

தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி!

நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாம் முறையாக நீட் தேர்வுக்கு விக்னேஷ் தயாராகி வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி!

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விக்னேஷின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுஅல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி!

மேலும் இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, “மாணவச் செல்வங்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மனவேதனை அளிக்கிறது என்றும் வாழ்வில் வெற்றிபெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கின்றன. எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி விடாமுயற்சியை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்” என்று கூறியுள்ளார்.