கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!

 

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் தினம் தினம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா தடுப்பு மையங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் தேனி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 6,972 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,707பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!

இந்நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.