சென்னையில் ரூ.65 லட்சம் கடத்தல் தங்கம், ஐபோன்கள் பறிமுதல்!

 

சென்னையில் ரூ.65 லட்சம் கடத்தல் தங்கம், ஐபோன்கள் பறிமுதல்!

சென்னை

ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை, ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களையும், அவர்களின் உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்கேத்திற்கு உரிய விதமாக இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.

சென்னையில் ரூ.65 லட்சம் கடத்தல் தங்கம், ஐபோன்கள் பறிமுதல்!

அதில் அவர் தங்கத்தை பசை வடிவில் மாற்றி, ஆசனவாயில் மறைத்து கடத்தியது தெரியவந்து. மேலும், அவரது உடமைகளுக்குள் மறைந்தது விலை உயர்ந்த ஐபோன்கள், ஐவாட்சுகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த பயணியிடம் இருந்து சுமார் 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 12 கிராம் அளவிலான தங்கத்தையும், 13 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 65 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுதொடர்பாக தங்கத்தை கடத்திவந்த நபரை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.