திருச்சியில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

 

திருச்சியில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

திருச்சி

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த சிறப்பு விமானத்தில் பயணித்தவர்களையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

திருச்சியில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

இந்த சோதனையின் போது, காரைக்குடியை சேர்ந்த அயூப்கான்(30) என்ற பயணியின் மீது சந்தேகம் எழுவே அவரை தனியே அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அப்போது, டார்ச் லைட்டுக்குள் மறைத்து தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்து ரூ.60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அயூப்கானை கைதுசெய்து, சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.