கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டோர் புகார்!

 

கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டோர் புகார்!

ஈரோடு

ஈரோட்டில் கூடுதல் வட்டி வழங்குவதாக கூறி, 20 பேரிடம் 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி-யிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். அந்தியூர் அடுத்த தவுட்டுபாளையத்தை சேர்ந்தவர் பாரதி. இவர் பவானி நகர கூட்டுறவு வங்கியில் பிராஜெக்ட் வேலை செய்து வருவதாகவும், இந்த வேலையில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால், 10 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டோர் புகார்!

இதனை நம்பி, அந்தியூரை சேர்ந்த 20 பேர் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர். இந்நிலையில், பணத்தை வசூல் செய்த பாரதி அதற்காக டெபாசிட் செய்தவர்களுக்கு பவானி நகர கூட்டுறவு வங்கியின் பெயரில் போலி காசோலையை வழங்கி உள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி பணம் தராததால், தங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் இன்று ஈரோடு மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தனர். மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.