சேலம் மாவட்டத்தில் இதுவரை, உரிய ஆவணமில்லாத ரூ.6.27 கோடி பறிமுதல்!

 

சேலம் மாவட்டத்தில் இதுவரை, உரிய ஆவணமில்லாத ரூ.6.27 கோடி பறிமுதல்!

சேலம்

சேலம் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.6 கோடியே 27 லட்சம் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்லையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் விதமாக, மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை, உரிய ஆவணமில்லாத ரூ.6.27 கோடி பறிமுதல்!

அதன்படி நேற்று மாலை நிலவரப்படி சேலம் மாவட்டம் முழுவதும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதாக ரூ.6 கோடியே 27 லட்சத்து 620 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ரூ.36 கோடியே 67 லட்சம் மதிப்பிலான 418 கிலோ 334 கிராம் தங்கமும், ரூ.1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 405 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டியதால் ரூ.2 கோடியே 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.3.24 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 850 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கமும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய பணம் மற்றும் நகைகள் மாவட்ட கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.