கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு.. ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையா?!

கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு.. ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையா?!

கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தொழில்கள் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர இன்னும் 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவரும் செயலாளரும் தெரிவித்துள்னர்.

கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு.. ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையா?!

நாமக்கல்லில் இது குறித்து பேசிய அவர்கள், கொரோனா வைரஸ் பரவஆரம்பித்ததில் இருந்தே கோழிப்பண்ணை தொழில் பாதிக்கப்பட்டதாகவும், போக்குவரத்து முடக்கப்பட்டதால் தீவனங்களின் விலை உயர்ந்து விட்டதாகவும் முட்டைகளை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால், தங்களுக்கு வங்கிகளில் 4% குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும் என்றும் தீவன மூலப்பொருட்கள் வாங்க விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பண்ணையில் வேலையாட்கள் குறைந்துள்ளதால் 100 நாட்கள் வேலை செய்பவர்களை இதில் ஈடுபடுத்தினால் தொழில் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு.. ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையா?!

மேலும் சத்துணவுக்கு முட்டை அனுப்பினால் கூட இந்த நிலை வந்திருக்காது என்று தெரிவித்த அவர்கள், அரசே நேரடியாக முட்டைகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.