ஊரடங்கால் தவித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிர அரசு உதவித்தொகையை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், பாலியல் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் ரூ.2,500 கூடுதலாக வழங்கப்படும் என்றும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரையில் இந்த பணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஊரடங்கால் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்ததால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றும் அரசின் உத்தரவை ஏற்ற பாலியல் தொழிலாளர்களுக்கு பணம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாலியல் தொழிலாளர்களுக்கு உதவும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழும் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.