மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- தெற்கு ரயில்வே

 

மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- தெற்கு ரயில்வே

முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. அதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- தெற்கு ரயில்வே

இந்நிலையில் ரயில் பயணத்தின்போதும் ரயில்வே வளாகத்திற்குள் நுழையும்போதும் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் இந்த நடைமுறை அடுத்த ஆறு மாதத்திற்கு அமலில் இருக்கும் எனவும் மறு உத்தரவு வரும்வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.