சென்னையில் ‘மாஸ்க்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் ‘மாஸ்க்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து இன்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 ஆக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இன்று முதல் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. முகக்கவசம் போடாமல் நடந்து செல்பவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.

சென்னையில் ‘மாஸ்க்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!

இந்நிலையில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் தலா ரூ. 500 அபராதத்தை சென்னை போக்குவரத்து போலீசார் வசூலித்தனர். அதன் அடிப்படையில் வாகன தணிக்கையில் முகக்கவசம் அணியாத 2130 பேர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 500 வீதம் ஒரே நாளில் ரூ. 10 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.