லாரி ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

லாரி ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

லாரி ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரி ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலு . இவர் நேற்று கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது முருகவேல் என்பவர் குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதை கண்ட எஸ்.ஐ.பாலு முருகவேலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், அங்கிருந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பைக்கில் சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. பாலு மீது மோதியுள்ளார். இதில் பாலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை கொன்ற முருகவேலை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

லாரி ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

இந்நிலையில் சரக்கு வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ பாலு குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அத்துடன் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.