கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும்! – டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

 

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும்! – டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும்! – டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை
டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநிலச் செயலாளராக இருந்த ராஜா கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் டாஸ்மாக் கடை விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரனும் உயிரிழந்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதுதான் காரணம்

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும்! – டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைஎன்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியது. இதைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும்! – டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைஅதில், கொரோனா முன்களப் பணியில் உள்ள மற்ற அரசுத் துறை பணியாளர்களுக்கு அரசு அறிவித்தது போன்று, டாஸ்மாக் ஊழியர்கள் இறந்தாலும் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.