கொரோனா பணியில் ஈடுபட்ட செவிலியர் உயிரிழப்பு.. முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

 

கொரோனா பணியில் ஈடுபட்ட செவிலியர் உயிரிழப்பு.. முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 58 வயதான செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா பணியில் ஈடுபட்ட செவிலியர் உயிரிழப்பு.. முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

இந்நிலையில்,. அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,” சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் திருமதி ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் 27.5..2020 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது உயிரிழந்த செவிலியர் திருமதி மேரி பிரிசில்லா அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தொடர்புடைய பணிகளில் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய திருமதி மேரி பிரிசில்லா அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.