கோயில் உண்டியலை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

 

கோயில் உண்டியலை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

கோவை

கோவை போத்தனூரில் கோயில் உண்டியலை உடைத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் போத்தனூரில் இருந்து மதுக்கரை செல்லும் சாலையில் ஜெய மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு இரவு கோயில் நிர்வாகிகள் பூஜை முடிந்து கோயிலை பூட்டிச்சென்றார். மறுநாள் காலையில் கோயிலை திறக்க வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்துள்ளார்.

கோயில் உண்டியலை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

அப்போது கோயிலில் இருந்த உண்டியல் மர்மநபர்களால் தூக்கிச்செல்லப்பட்டது தெரியவந்தது. அதில், சுமார் 40 ரூபாய் அளவிலான காணிக்கை பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலின் அருகேயுள்ள புதரில் மர்மநபர்கள் வீசி சென்ற உண்டியலை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.