சுற்றுச்சுவர் விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!

சுற்றுச்சுவர் விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!

சேலத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த‌தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் வீரக்கல்புதூர் பகுதியில் ரயில்வே துறை சார்பில் இரட்டை இருப்புப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் என்பவரின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பணியில் ஜலகண்டபுரத்தில் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 13 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர்

சுற்றுச்சுவர் விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!

ரயில்வே இருப்புப் பாதை அருகே 10 அடி உயரம் கொண்ட பழைய சுவர் ஒன்று இருந்துள்ளது. இருப்புப்பாதை விரிவாக்கத்திற்கான பணியில் புதிதாக சுவர் கட்ட அருகே பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் நேற்று மாலை பழைய தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் பணியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் செல்லும் வழியில் கவிதா என்ற 40 வயது பெண் பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுற்றுச்சுவர் விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!

இந்நிலையில் வீரக்கல்புதூரில் நடந்த விபத்தில் பலியான கவிதாவின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ. 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.