ரூ.36 கோடி வருமான வரி பாக்கி உள்ளது… ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த வருமான வரித்துறை எதிர்ப்பு!

 

ரூ.36 கோடி வருமான வரி பாக்கி உள்ளது… ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த வருமான வரித்துறை எதிர்ப்பு!

ஜெயலிலதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளதால் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்த அனுமதிக்க முடியாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

ரூ.36 கோடி வருமான வரி பாக்கி உள்ளது… ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த வருமான வரித்துறை எதிர்ப்பு!ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதாலும், வருமான வரி பாக்கி தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்ததாலும் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதில் ஆட்சேபனை ஏதும் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

ரூ.36 கோடி வருமான வரி பாக்கி உள்ளது… ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த வருமான வரித்துறை எதிர்ப்பு!அதற்கு வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஜெயலலிதா தரப்பில் ரூ.36 கோடி வரி பாக்கி உள்ளது. இதனால், அவரது இல்லத்தை கையகப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த பணத்தை தமிழக அரசே ஏற்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.