மத்திய பட்ஜெட் தாக்கல்: கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

 

மத்திய பட்ஜெட் தாக்கல்: கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட்டின் உரை கீழ்க்கண்டவாறு;

மத்திய பட்ஜெட் தாக்கல்: கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

2021-22 ஆண்டில் கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 64,184 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் ஜவுளி துறையில் 7 புதிய தொழில் மண்டலங்கள் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்; மேலும் 2 புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

64 ஆயிரத்து 180 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

1.41 லட்சம் கோடியில் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க திட்டம்.

ஜவுளி துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மிகப்பெரிய முதலீட்டு பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும்.

மூன்று ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.