ஐந்தே நாளில் ரூ.3076 கோடி வசூல்… பிஎம் கேர்ஸ் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட ப.சி வலியுறுத்தல்

 

ஐந்தே நாளில் ரூ.3076 கோடி வசூல்… பிஎம் கேர்ஸ் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட ப.சி வலியுறுத்தல்


பிஎம் கேர்ஸ்க்கு ஐந்தே நாளில் 3076 கோடி வசூல் ஆகியுள்ளது என்று தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதால் நன்கொடையாளர்கள் விவரத்தை வெளியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்தே நாளில் ரூ.3076 கோடி வசூல்… பிஎம் கேர்ஸ் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட ப.சி வலியுறுத்தல்


நாட்டின் பேரிடரை எதிர்கொள்ள பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதி திட்டம் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் புதிதாக பிஎம் கேர்ஸ் என்ற ஒரு அறக்கட்டளையை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் மோடியும், உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


ஏற்கனவே பிரதமர் தேசிய பேரிடர் நிதி உள்ள நிலையில் எதற்காக புதிதாக பி.எம் கேர் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் குறித்த தணிக்கை அறிக்கையை அந்த அறக்கட்டளை வௌியிட்டுள்ளது. அதன் இணைதளத்தில் வெளியிடப்பட்ட தணிக்கையில், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட மார்ச் 27ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.3076 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. நன்கொடையாளர்கள் யார் என்ற விவரம் இல்லை.


இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பிஎம் கேர்ஸ் தொடங்கப்பட்டதிலிருந்து ஐந்து நாளில் ரூ.3076 கோடி நிதி வந்துள்ளது என தணிக்கையாளர்கள் உறுதி

ஐந்தே நாளில் ரூ.3076 கோடி வசூல்… பிஎம் கேர்ஸ் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட ப.சி வலியுறுத்தல்

செய்துள்ளார்கள். ஆனால், அந்தப் பெருந்தன்மையான நன்கொடையாளர்கள் யார் என்பது இன்னும் ஏன் வெளியிடப்படவில்லை? அதற்கான காரணம் என்ன?
ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் தாங்கள் பெற்ற குறிப்பிட்ட அளவு நன்கொடை குறித்த விவரத்தையும் நன்கொடை அளித்தவர்கள் பெயரையும் வெளியிடக் கடமை இருக்கிறது. இந்த கடமையிலிருந்து பி.எம் கேர்ஸ்க்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளையாவார்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களை நன்கு தெரியும். பின் எதற்காக நன்கொடை கொடுத்தவர்கள் பெயரை வெளியிட பயப்பட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.