மதுரை மாவட்டத்துக்கு ரூ.304 கோடியில் திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர்

 

மதுரை மாவட்டத்துக்கு ரூ.304 கோடியில் திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆரம்ப கட்டத்தில் சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். அதன் காரணமாக திருவள்ளூர், தேனி, மதுரை, தென்காசி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்துமாறு தலைமை செயலாளர் சண்முகம் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மதுரை மாவட்டத்துக்கு ரூ.304 கோடியில் திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர்

இன்று காலை திண்டுக்கல் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர், 42 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதே போல பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி மதுரை மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அம்மாவட்டத்துக்கு ரூ.304 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடக்கி வைத்த முதல்வர், ரூ.21.57 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடக்கி வைத்துள்ளார். இதனையடுத்து தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.