கனமழையால் நீரில் மூழ்கிய மதுரை தற்காலிக காய்கறி சந்தை..ரூ.30 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் சேதம்!

 

கனமழையால் நீரில் மூழ்கிய மதுரை தற்காலிக காய்கறி சந்தை..ரூ.30 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் சேதம்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெரிய மார்கெட்டுகள் வெவ்வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. அந்த வகையில் மதுரை மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், அம்மா திடல் மற்றும் மாட்டுத்தாவணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் படி அங்கு வழக்கம் போல, இரவு நேரங்களில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த காய்கறி மார்க்கெட்டில் மொத்தமாக 150 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

கனமழையால் நீரில் மூழ்கிய மதுரை தற்காலிக காய்கறி சந்தை..ரூ.30 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் சேதம்!

இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் பெய்த கனமழையின் காரணமாக அந்த மார்க்கெட் முழுவதும் மழை நீர் புகுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 150 கடைகளிலும் இருப்பில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறிகள் மூழ்கி கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மாற்று இடம் அளிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் உடனே 150 கடைக்களுக்கு இடம் கொடுக்க முடியாததால் நேற்று வியாபாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இந்த மழையால் ரூ.30 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் சேதம் அடைந்த நிலையில், பிற மாவட்டங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.