செங்குன்றம் அருகே ரூ.30 லட்சம் குட்கா பறிமுதல் – தனிப்படை போலீசார் அதிரடி!

 

செங்குன்றம் அருகே ரூ.30 லட்சம் குட்கா பறிமுதல் – தனிப்படை போலீசார் அதிரடி!

திருவள்ளூர்

செங்குன்றம் அருகே 4 வாகனங்களில் மறைத்து கடத்திவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, மாதவரம் துணை ஆணையர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் வாகனத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

செங்குன்றம் அருகே ரூ.30 லட்சம் குட்கா பறிமுதல் – தனிப்படை போலீசார் அதிரடி!

இதனை அடுத்து, புது கும்மிடிபூண்டியை சேர்ந்த ஓட்டுநர் கஜேந்திரன் மற்றும் உதவியாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் 4 வேன்களில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த சேகல் மற்றும் பொன்னேரி அடுத்த தேவம்பட்டைபை சேர்ந்த ராஜி என்பவரையும் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், பிடிட்ட நபர்கள் மற்றும் குட்கா ஆகியவை செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை அதிரடியாக மடக்கிப்பிடித்த மாதவரம் துணை ஆணையர் மற்றும் தனிப்படை போலீசாருக்கு, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்தார்.