அமெரிக்க வாழ் தமிழர்கள் ரூ.3 கோடி நிதியுதவி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

அமெரிக்க வாழ் தமிழர்கள் ரூ.3 கோடி நிதியுதவி! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை ரூபாய் 3 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

அமெரிக்க வாழ் தமிழர்கள் ரூ.3 கோடி நிதியுதவி! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். நடிகர், நடிகைகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

அமெரிக்க வாழ் தமிழர்கள் ரூ.3 கோடி நிதியுதவி! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

இந்நிலையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை – அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் தமிழகத்தில் சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமெரிக்க வாழ் தமிழர்கள் 100 கோடி நிதியை வழங்கியுள்ளீர்கள். இதற்கான முயற்சி எடுத்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை, ஐஐடி முன்னாள் மாணவர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழர்களுக்காக உதவ முன் வந்த அமெரிக்க மக்கள், தொழிலதிபர்கள் ,தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம்.நீங்கள் புலம்பெயர்ந்து சென்று இருந்தாலும் நம்மை இணைப்பதும் கிடைப்பதும் தாய் மொழியாம் தமிழ் மொழி தான். அந்த தமிழ் மொழி போல் வாழ்க என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.