ஆந்திரவிலிருந்து கடத்திவந்த ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

ஆந்திரவிலிருந்து கடத்திவந்த ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

கேரளா

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கடத்தமுயன்ற 3 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுல் செய்த போலீசார், இதுதொடர்பாக பிரபல கஞ்சா வியாபாரி உட்பட இருவரை கைது செய்தனர்.

ஆந்திரவிலிருந்து கடத்திவந்த ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக, பாலக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி லாரியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதை அடுத்து, போலீசார் அதனை துரத்திச்சென்று மஞ்சாகுளம் தேவாலயம் அருகே மடக்கிப்பிடித்தனர்.

ஆந்திரவிலிருந்து கடத்திவந்த ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்தபோது தண்ணீர் கேன்களுக்கு கீழே மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்து இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த போரெஸ்ஸி வெங்கடேஸ்வரலு ரெட்டி (35), மற்றும் சேலத்தை சேர்ந்த வினோத்குமார் (27) என்பதும். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

ஆந்திரவிலிருந்து கடத்திவந்த ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான 296 கிலோ கஞ்சா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கைதான வெங்கடேஸ்வரலு ஆந்திராவில் பிரபல கஞ்சா வியாபாரியாக வலம்வந்ததும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.