ஈமூ கோழிப்பண்ணை நடத்தி ரூ.3.42 கோடி மோசடி – பெண் போலீஸ் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

 

ஈமூ கோழிப்பண்ணை நடத்தி ரூ.3.42 கோடி மோசடி – பெண் போலீஸ் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

கோவை

ஈரோட்டில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் போலீஸ் உட்பட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஜோதி நகரை சேர்ந்தவர் கார்த்திக் சங்கர். இவருக்கு காயத்ரிஸ்ரீ் என்ற மனைவியும், சபின் கண்ணா என்ற மகனும் உள்ளனர். காயத்ரிஶ்ரீ காவலராக பணிபுரிந்து வந்தார்,.

ஈமூ கோழிப்பண்ணை நடத்தி ரூ.3.42 கோடி மோசடி – பெண் போலீஸ் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

இந்த நிலையில், கார்த்திக்சங்கர் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து கடந்த 2012 ஆம் ஆண்டு கே.ஜ. பிரைட் எனும் பெயரில் ஈமு கோழிப் பண்ணை நடத்தியுள்ளார். இதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதுடன், முதலீட்டாளர்களை நடிகர், நடிகைகளை அழைத்து பாராட்டுவது மற்றும் சுற்றுலாவிற்கும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை நம்பி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 73 பேர் தலா 2 லட்சம் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், திடீரென கார்த்திக் சங்கர், குடும்பத்துடன் மாயமாகி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பவானி எல்லமலை, சின்ன புலியூரை சேர்ந்த வெங்கடேசன்(28) என்பவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

ஈமூ கோழிப்பண்ணை நடத்தி ரூ.3.42 கோடி மோசடி – பெண் போலீஸ் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மூவரையும் கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கோவை மவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவி, பெண் காவலர், அவரது கணவர் மற்றும் மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 கோடியே 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.