என்95 மாஸ்க் தருவதாக மருத்துவரிடம் ரூ.3.15 கோடி மோசடி!

என்95 மாஸ்க் தருவதாக மருத்துவரிடம் ரூ.3.15 கோடி மோசடி!

என்95 மாஸ்க் தருவதாக மருத்துவரிடம் ரூ.3.15 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்95 மாஸ்க் தருவதாக மருத்துவரிடம் ரூ.3.15 கோடி மோசடி!

கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் மாஸ்க் பயன்பாடும், அதன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

என்95 மாஸ்க் தருவதாக மருத்துவரிடம் ரூ.3.15 கோடி மோசடி!

இந்நிலையில் என்95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக 2 நிறுவனங்கள் ரூ.3.15 கோடி மோசடி செய்ததாக மதுரை மருத்துவர் சந்திரமோகன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். வாடிப்பட்டி ஸ்ரீகாளிகாம்பாள் மருத்துவமனை உரிமையாளர் சந்திரமோகன் குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், “நெதர்லாந்து நிறுவனம் ரூ.2.25 கோடியும், கிர்கிஸ்தான் நிறுவனம் ரூ.90 லட்சமும் என்95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக கூறி பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாககூறியுள்ளார். மருத்துவர் சந்திரமோகன் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.