தண்ணீர் தொட்டி விலை கேட்டால் வருது கண்ணீர்! இதுதான் இன்றைய சோஷியல் மீடியா ஹாட் டாப்பிக்!!

 

தண்ணீர் தொட்டி விலை கேட்டால் வருது கண்ணீர்! இதுதான் இன்றைய சோஷியல் மீடியா ஹாட் டாப்பிக்!!

சமூக வலைதளத்தில் இன்றைய ஹாட் டாப்பிக் தண்ணீர் தொட்டிதான். அதாவது திருப்பூரில் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.250 கோடி செலவிடப்பட்டதாக தண்ணீர் தொட்டியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூத்தம்பாளையத்தில் மேல்நிலை தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் இந்த தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ. 250 கோடி என்று தொட்டியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தண்ணீர் தொட்டி விலை கேட்டால் வருது கண்ணீர்! இதுதான் இன்றைய சோஷியல் மீடியா ஹாட் டாப்பிக்!!

முன்னதாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 1-வது வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடதக்கது.