“பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய ரூ.25 லட்சம் லஞ்சம்” : அம்பலமான முறைகேடு!

“பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய ரூ.25 லட்சம் லஞ்சம்” : அம்பலமான முறைகேடு!

விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதில் திருவண்ணாமலையில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.

“பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய ரூ.25 லட்சம் லஞ்சம்” : அம்பலமான முறைகேடு!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, கொரோனா, புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய ரூ.25 லட்சம் லஞ்சம்” : அம்பலமான முறைகேடு!

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதில் ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தியதில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. விசாரணையில் சங்க செயலாளர் அண்ணாதுரை முறைகேடு செய்து கண்டுபிடிக்கப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.