“ரூ.230 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்”..மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம டிரம்!

 

“ரூ.230 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்”..மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம டிரம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ளது கொக்கிலமேடு கடற்கரையில் வழக்கம் போல மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு டிரம் வந்து கரை ஒதுங்கியுள்ளது. சாதாரண டிரம் ஆக இருக்கலாம் என்று எண்ணி அங்கிருந்த மீனவர்கள் அதனை உடைத்து பார்த்துள்ளனர். அதில் 78 பொட்டலங்கள இருந்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில்,உடனே அங்கு போலீசாரும் கடலோர காவல் படையினரும் விரைந்து சென்றுள்ளனர்.

“ரூ.230 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்”..மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம டிரம்!

அங்கு இருந்த டிரம்மில் போலீசார் சோதனை செய்ததில், அந்த பொட்டலங்கள் அனைத்தின் மேலும் ரீபைன்ட் சைனீஸ் டீ என்று சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பொட்டலங்களை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பரிசோதனையில், பொட்டலங்களில் இருந்தது ஹெராயின் போதை பொருள் வகையை சேர்ந்த மெத்தாம்பிடைமின் போதை பொருள் என்பதும் அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.230 கோடி என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த போதைப்பொருள்கள் அனைத்தும் மியான்மர் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று போதை தடுப்பு பிரிவினர் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட இந்த போதைப்பொருள் மாமல்லபுரம் கடலில் மிதந்து வந்தது எப்படி என்றும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.