விதி மீறி மது விற்றல்..டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்?!

 

விதி மீறி மது விற்றல்..டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்?!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்த படுவதற்கு முன்னர், மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதே போல கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாலை டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அந்த நாளின் வருமானத்தை ஊழியர்கள், மறுநாள் வங்கியில் செலுத்தினர். மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபாட்டில்கள் அனைத்தும் கடைகளிலேயே வைக்கப்பட்டன. மது இல்லாமல் கடுப்பில் இருந்த குடிமகன்கள், மதுக்கடைகளை உடைத்து மதுபாட்டில்களை திருடிய பல சம்பவங்கள் நடந்தன.

விதி மீறி மது விற்றல்..டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்?!

இதனிடையே ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில் மது பாட்டில்கள் கிடங்குக்கு மாற்றப்பட்ட போது 24 ஆம் தேதி இருந்த அளவிற்கு இருப்பு இல்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த வித்தியாசத் தொகையை ஊழியர்கள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி மதுக்கடைகள் தற்போது திறக்கப்பட்டு விட்டன. அதனால் இருப்பு குறைவானதற்கு ஊழியர்கள் அபராதம் 50%, வட்டி 4% மற்றும் 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து செலுத்துமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

விதி மீறி மது விற்றல்..டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்?!

இது குறித்து பேசிய டாஸ்மாக் பணியாளர்கள், “தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் மொத்தம் 95% இருப்புக் குறைவு இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு கடையில் ரூ.10,000 இருப்பு குறைந்தால் அபராதம், வட்டி, ஜி.எஸ்.டி என அனைத்தையும் சேர்த்து ரூ.6,136 ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சில கடைகளில் ரூ.12 லட்சம் அளவிற்கு கூட இருப்பு குறைந்துள்ளது. அதனால் அந்த கடை ஊழியர்கள் லட்ச கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதிலும் உள்ள கடை மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வருமானம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.