காங்கேயத்தில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற இளைஞர் கைது – ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்!

 

காங்கேயத்தில்  கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற இளைஞர் கைது – ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்!

திருப்பூர்

காங்கேயம் அருகே கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த படியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரிடம் சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.200 கள்ளநோட்டுகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

காங்கேயத்தில்  கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற இளைஞர் கைது – ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்!

இதனை அடுத்து, அவரிடம் இருந்து சுமார் 1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை காங்கேயம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் கும்பகோணம் அடுத்த கள்ளுக்கடை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், அவர் திருப்பூரில் பணத்தை மாற்ற முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து, கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, அங்கு 72 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் மற்றும் கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து, கண்ணன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.