கோவைக்கு லாரியில் கடத்திய ரூ.2.75 லட்சம் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்!

 

கோவைக்கு லாரியில் கடத்திய ரூ.2.75 லட்சம் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்!

கோவை

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கண்டெய்ணர் லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.2.75 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுவை கடத்திவந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது.

கோவைக்கு லாரியில் கடத்திய ரூ.2.75 லட்சம் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்!

இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின், லாரிக்குள் பெட்டி பெட்டியாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, 2 லட்சத்து 75 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை கடத்தியது தொடர்பாக லாரி ஓட்டுநர் தென்காசியை சேர்ந்த காந்தி( 30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.