பொதுமுடக்க விதிமீறல்; இதுவரை ரூ.19.87 கோடி அபராதம் வசூல்!

 

பொதுமுடக்க விதிமீறல்; இதுவரை ரூ.19.87 கோடி அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை குறைப்பதற்காகவும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவும் பிற மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறையை தகர்க்குமாறு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும், இ பாஸ் நடைமுறையில் இருந்து இப்போதைக்கு விலக்கு அளிக்கப்படாது என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

பொதுமுடக்க விதிமீறல்; இதுவரை ரூ.19.87 கோடி அபராதம் வசூல்!

இதனிடையே பொதுமுடக்க விதிகளை மீறி செல்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை விதிகளை மீறி சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.19.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் 6.68 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 9.46 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் 8.58 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.