டாஸ்மாக்கில் ஜோராக நடந்த மது விற்பனை.. கோடிக் கணக்கில் அரசுக்கு வருவாய்!

டாஸ்மாக்கில் ஜோராக நடந்த மது விற்பனை.. கோடிக் கணக்கில் அரசுக்கு வருவாய்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் சூழலில், வாக்காளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக்குகள் இயங்காது என அரசு அறிவித்தது. அதாவது, இன்று முதல் 6ம் தேதி வரையில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுப்பதை தடுக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த செய்தி மதுபிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

டாஸ்மாக்கில் ஜோராக நடந்த மது விற்பனை.. கோடிக் கணக்கில் அரசுக்கு வருவாய்!

3 நாட்கள் கடை இருக்காது என்பதால், முன் தினமே மதுபானம் வாங்கி வைத்துக்கொள்ள மதுக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட குடிமகன்கள், முந்தியடித்துக் கொண்டு மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். பிளாக்கில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

டாஸ்மாக்கில் ஜோராக நடந்த மது விற்பனை.. கோடிக் கணக்கில் அரசுக்கு வருவாய்!

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என சொல்லிக் கொண்டிருக்கும் அரசு.. இன்னும் ஏன் அதை செய்யாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாக புரிகிறது..!