நெல்லை அருகே ரூ.12 கோடி தங்கம் பறிமுதல்… வருமான வரி அதிகாரிகள் விசாரணை…

 

நெல்லை அருகே ரூ.12 கோடி தங்கம் பறிமுதல்… வருமான வரி அதிகாரிகள் விசாரணை…

நெல்லை

நெல்லை அருகே உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 12 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் சோதனைச் சாவடி அருகே இன்று காலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 12 கோடியே 89 லட்சம் ரூபாய் தங்க நகைகள் கொண்டு சென்றது தெரியவந்தது.

நெல்லை அருகே ரூ.12 கோடி தங்கம் பறிமுதல்… வருமான வரி அதிகாரிகள் விசாரணை…

இதுகுறித்து வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரித்தபோது, அவற்றை மதுரை விமான நிலையத்தில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள நகை கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பறக்கும் படை அதிகாரிகள் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து, அங்கு வந்த வருமான வரி அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆவணங்களில் திருப்தி ஏற்படாததால் வாகனத்துடன் தங்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை பாளையங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.