தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் – சென்னை மாநகராட்சி

 

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் – சென்னை மாநகராட்சி

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகள் மற்றும் நடைபாதை கடைகள் தற்காலியமாக மூடப்பட்டன கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது. இவை செப். 1 ஆம் தேதி முதல் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டன. காய்கறி சந்தைகள் மற்றும் சாலையோர கடைகள் திறக்கப்படாததால் சிறு, குறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் – சென்னை மாநகராட்சி

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.