ரூ. 1000 கோடி பட்டாசுகள் தேக்கம் : உற்பத்தியாளர்கள் கவலை!

 

ரூ. 1000 கோடி  பட்டாசுகள் தேக்கம் : உற்பத்தியாளர்கள் கவலை!

உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரூ. 1000 கோடி  பட்டாசுகள் தேக்கம் : உற்பத்தியாளர்கள் கவலை!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் காற்று மாசு காரணமாக டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அந்தந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.

ரூ. 1000 கோடி  பட்டாசுகள் தேக்கம் : உற்பத்தியாளர்கள் கவலை!

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உற்பத்தியான பட்டாசுகளில் இந்த ஆண்டு ரூ.1000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய பட்டாசுகள் தேக்கம் அடைந்து நிற்பதால், கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டு பட்டாசு உற்பத்தி செய்ய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.